இலங்கை கடற்படையின் பணியாற்றும் கேப்டன் அனில் போவத்த முன்னாள் சேவையாளர்கள் படைக்கு ஒரு வீட்டை நன்கொடையாக வழங்கினார்

இலங்கை கடற்படையின் பணியாற்றும் கேப்டன் அனில் போவத்தவுக்கு சொந்தமான கண்டி கட்டுகஸ்தோட்டவில் உள்ள வீட்டை கடற்படை சிரமத்தில் முதியோர் இல்லமாக புதிப்பித்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் இன்று (ஆகஸ்ட் 31) மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் இலங்கை முன்னாள் சேவையாளர்கள் படையினருக்கு வழங்கப்பட்டது.

ஆனந்த ஜெயசிங்க மற்றும் இந்திரா போவாத்த ஆகியோரால் கேப்டன் அனில் போவத்தவிற்கு பரிசாக வழங்கப்பட்ட இந்த வீடு, முதியோருக்கான "இந்திரா ஆனந்த" வீடு என்று பெயரிடப்பட்டுள்ளது. நான்கு அறைகள் கொண்ட இந்த வீட்டில் பத்து (10) பேர் தங்க்க்கூடிய வசதி கொண்டுள்ளது.

கடற்படைத் தளபதி இந்திரானந்தா முதியோர் இல்லத்தை திறந்து உறையாடிய பிறகு மக்கள் குடியிருப்புக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, வீட்டைப் புதுப்பிக்க பங்களித்த இலங்கை கடற்படைக் கப்பல் சில்பவின் கடற்படையினருக்கு விருதுகளும் வழங்கப்பட்டன

இந்நிகழ்வுக்காக இலங்கை முன்னாள் சேவையாளர்கள் படையின் தளபதி மேஜர் ஜெனரல் (ஓய்வு) உபுல் பெரேரா, கேப்டன் அனில் போவத்தவின் உறவினர்கள் மற்றும் ஏராளமான கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.