எதிர்கால தலைமுறைக்கு அழகான கடலோரப் பகுதியைப் பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

நாட்டின் அழகிய கடலோரப் பகுதியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை துப்புரவு திட்டம் 2019 ஆகஸ்ட் 31 ஆம் திகதி தெற்குப் பகுதி கடற்கரைகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அதன் படி, தெக்கு கடற்கரைகளான ஹம்பாந்தோட்டை வெலிபதன்வில கடற்கரை, பூச்ச கடற்கரை, தெவுன்தர கலங்கரை விளக்கம் பகுதி கடற்கரை சுத்தம் செய்ய தெற்கு கடற்படை கட்டளை இந்த திட்டத்தை ஏற்பாடு செய்தது. பல காரணங்களால் மாசுபட்ட இந்த கடற்கரைகள் கடற்படையின்முயற்சிகள் காரணமாக அவற்றின் முந்தைய நிலைக்கு மீட்டமைக்கப்பட்டன.

மேலும், தீவைச் சுற்றியுள்ள கடலோர சுற்றுச்சூழல் அமைப்பு ஒரு அழகான கடற்கரை என்பதை உறுதிப்படுத்த நாங்கள் பணியாற்ற வேண்டும், மேலும் இந்த முயற்சிக்கு கடற்படை எப்போதும் உறுதியுடன் உள்ளது. இது மூலம் எதிர்கால தலைமுறையினருக்கு மாசு இல்லாத கடற்கரைகள் வழங்க கடற்படை அக்கறை செலுத்துகிறது.


பூஸ்ஸ கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டம்


தேவுந்தரை கலங்கரை விளக்கத்தில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம்


ஹம்பாந்தோட்டயின் வெலிபடன்வில் கடற்கரை செய்யும் சுத்தம் திட்டம்