அழகான கடற்கரையை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

தீவைச் சுற்றி ஒரு அழகிய கடற்கரை உருவாக்கும் நோக்கத்துடன் கடற்படை மேற்கொண்டிருக்கும் திட்டத்தொடரில் மற்றொரு திட்டம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி காலி கிங்தோட்டை கடற்கரை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அதன்படி, தெற்கு கடற்படை கட்டளை மூலம் கடற்கரையை சுத்தம் செய்தல் மற்றும் கடலோர மரக்கன்றுகளான மூதில்லா, தேங்காய் மற்றும் வெட்டகேயா செடிகளை நடவு செய்துள்ளதுடன் பெரும்பாலான கழிவுகளை அகற்றப்பட்டது. இந் நிகழ்வுக்காக கின் கங்க பகுதியின் கடற்படையினர், மதத் தலைவர்கள் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.

கடற்கரையை பாதுகாப்பதற்கும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும் விடாமுயற்சியுடன், இலங்கை கடற்படை இதுபோன்ற சூழல் நட்பு திட்டங்களை அடுத்த தலைமுறையினரின் நலனுக்காக செயல்படுத்தி வருகிறது.