192.5 கிலோகிராம் பீடி இலைகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸ் அதிரடிப்படை இனைந்து 2019 செப்டம்பர் 05 ஆம் திகதி மன்னார், தாரபுரம் பகுதியில் நடத்திய சோதனையின் போது 192.5 கிலோகிராம் பீடி இலைகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டது.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளை மற்றும் மன்னார் பொலிஸ் அதிரடிப்படை இனைந்து மன்னார், தாரபுரம் பகுதியில் நடத்திய சோதனையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் 192.5 கிலோகிராம் பீடி இலைகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டது. இந்த பீடி இலை பொதி சட்டவிரோதமாக 11 பொட்டலங்களில் அடைக்கப்பட்டு ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த மோட்டார் சைக்கிள் மேலும் சோதிக்கும் போது இந்த கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டனர். சந்தேக நபர் 32 வயதான இந்த பகுதியிலே வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டார்.

மேலும் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை எதிர்த்து இலங்கை கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இதன் விளைவாக ஏராளமான சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்துகின்ற மற்றும் விற்பனை செய்கின்ற நபர்கள் கைது செய்யப்படுகின்றனர்.