பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் “சொமுத்ரா அவிஜன்” கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இன்று (செப்டம்பர் 07) நல்லெண்ண பயணத்திற்காக கொழும்பு துறைமுகத்திற்கு பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் “சொமுத்ரா அவிஜன்” வந்தடைந்ததுடன் கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படையினால் அன்புடன் வரவேற்றக்கப்பட்டது.

பங்களாதேஷ் கப்பலின் கட்டளை அதிகாரி கொமாண்டர் ஜாஹிருல் ஹக் மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் தளபதி மேற்கு கடற்படை பகுதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவை சந்தித்தார். அவர்கள் பரஸ்பர ஆர்வமுள்ள விஷயங்களில் நல்லுறவு கலந்துரையாடல்களை நடத்தியதுடன், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொண்டனர்.

இலங்கையில் நான்கு நாட்கள் தங்கியிருந்தபோது, இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நட்பு விளையாட்டு நடவடிக்கைகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் தீவின் சுவாரஸ்யமான இடங்களுக்கு வருகை உள்ளிட்ட சில நிகழ்வுகளில் கப்பலின் குழுவினர் பங்கேற்றனர். மேலும், பங்களாதேஷ் கடற்படை ஹெலிகாப்டரில் கடற்படைக் கப்பலில் (பஸேஜ் உடற்பயிற்சி) தரையிறங்குவதற்கான பயிற்சி ஒத்திகையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

115.2 மீ நீளமும் 13.1 மீ அகலமும் கொண்ட “சொமுத்ரா அவிஜன்” இடப்பெயர்ச்சி திறன் டொன் 3367.58 உள்ளதுடன், நான்கு நாள் வருகை நிறைவடைந்த நிலையில், கப்பல் செப்டம்பர் 10 ஆம் திகதி தீவில் இருந்து புறப்பட உள்ளது.