காங்கேசன்துரை கடல்களில் கேரள கஞ்சா தொகை கடற்படையினரால் மீட்ப்பு

இன்று (செப்டம்பர் 10) கடற்படை 23.1 கிலோ கிராம் - கேரள கஞ்சா தொகையை காங்கேசன்துரை கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை காங்கேசந்துரை கடலில் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு பார்சல் கடலில் மிதப்பதை அவதானித்தது. பார்சலை பரிசோதித்தபோது, கேரள கஞ்சா 11 சிறிய பார்சல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகளுக்கு பயந்து சந்தேக நபர்கள் கஞ்சாவை விட்டு விட்டபட்டு சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா,மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்தின் பொலீஸ் போதைப்பொருள் பணியகத்திடம் (பி.என்.பி) ஒப்படைக்கப்டைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.