வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட பகல்நேர பராமரிப்பு மையம் இன்று திறக்கப்பட்டது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இன்று (செப்டம்பர் 12, 2019) வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட பகல்நேர பராமரிப்பு மையத்தை திறந்து வைத்தார்.

அதன்படி, கடற்படைத் தளபதி, வட மத்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சுதத் குருகுலசூரியாவின் வழிகாட்டுதலின் கீழ், கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக வட மத்திய கடற்படை கட்டளையின் உதவியுடன் பகல்நேர பராமரிப்பு மையம் கட்டப்பட்டது.

பகல்நேர பராமரிப்பு மையம் மருத்துவமனை ஊழியர்களின் குழந்தைகளுக்கு கவனிப்பை வழங்கக்கூடயதாக இருப்பத்தால் மருத்துவமனை ஊழியர்கள் கடற்படை தளபதி மற்றும் முழு கடற்படையினருக்கும் நன்றி தெரிவித்தனர். இந்த சந்தர்ப்பத்தை குறிக்கும் வகையில் கடற்படை தளபதி பகல்நேர பராமரிப்பு மையத்தில் ஒரு மரக்கன்றையும் நட்டார்.

இந் நிகழ்விற்க்கு வட மத்திய கடற்படை தளபதி, வவுனியா மாவட்ட செயலாளர், இலங்கை கடற்படை கப்பல் “பண்டுகாப” யின் கட்டளை அதிகாரி, கேப்டன் சுமித்ர பொன்சேகா, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் வடமத்திய கடற்படை கட்டளை அதிகாரிகள் மற்றும் கடற்படையினரும் கலந்து கொண்டனர்.