கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரை கைது செய்ய கடற்படை ஆதரவு

பொலிஸ் ஒருங்கிணைப்பில் கடற்படை ஒரு சந்தேக நபரை கேரள கஞ்சாவுடன் முத்தூர் பகுதியில் வைத்து 2019 செப்டம்பர் 14 அன்று கைது செய்ததுள்ளது.

அதன் படி, கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் முத்தூர் காவல்துறையினர் நடத்திய சோதனையில் போது 25 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் கேரள கஞ்சாவை விற்கத் தயாரானபோது இவ்வாரு கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணையில் அவர் அப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரி என்றும் அவர் 22 வயதான அப்பகுதியில் வசிப்பவர் என்றும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கேரள கஞ்சாவுடன் மேலதிக விசாரணைகளுக்காக முத்தூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவ்வாரான போதைப்பொருள் கடத்தல் காரர்களை கைது செய்ய கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.