வெற்றிகரமான கூட்டுப்பயிற்சியின் பின் சிந்துரல மற்றும் சுரனிமில கப்பல்கள் தாயகம் திரும்பின

2019 செப்டம்பர் 05ஆம் திகதி இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில்(Sri Lanka India Naval Exercise - SLINEX 2019) கலந்து கொள்வதற்காக சென்ற இலங்கை கடற்படைக் கப்பல் சிந்துரல மற்றும் சுரனிமில ஆகிய இரண்டு கடற்படை கப்பல்களும் கூட்டுப்பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்து இலங்கைக்கு வந்தடைந்தது.

இலங்கை கடற்படைக் கப்பல் சிந்துரல 2019 செப்டம்பர் 14 ஆம் திகதி திருகோணமலைக்கு வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படைக் கப்பல் சுரனிமில 2019 செப்டம்பர் 15 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது. அங்கு கடற்படை மரபுகளுக்கு அமைய மரியாதை செலுத்தி கப்பல்களை வரவேட்கப்பட்டுள்ளது. அதன் படி இலங்கை கடற்படைக் கப்பல் சிந்துரல வரவேற்கும் நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க உட்பட பல அதிகாரிகள் கழந்துகொண்டனர்.

மேலும், இலங்கை கடற்படைக் கப்பல் சுரனிமில வரவேற்கும் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் பல அதிகாரிகள் கழந்துகொண்டனர். பயிற்சி சுற்றுப்பயணத்தின் முன்னேற்றம் குறித்து வரவேற்பு நிகழ்வில் கழந்துகொன்ட மூத்த கடற்படை அதிகாரிகள், கொடி அதிகாரி கடற்படை கொடிகட்டளை, ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா மற்றும் கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் கேப்டன் நலின் நவரத்ன மற்றும் கேப்டன் சஞ்சிவ பிரேமரத்ன ஆகியோர் கலந்துரையாடினார்கள்.

இந்த கூட்டு கடற்படை பயிற்சி செப்டம்பர் 7 முதல் 12 வரை இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இலங்கை கடற்படைக் கப்பல்களுடன் இந்திய கடற்படைக் கப்பல்களான குக்ரி மற்றும் சுமேதா கப்பல்கள் கழந்துகொன்டன. இந்திய கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி தலைமை கடற்படை அதிகாரி, வைஸ் அட்மிரல் அதுல் குமார் ஜென் மற்றும் கிழக்கு கடற்படைப் பகுதியின் தலைமைப் பணியாளர்கள் (செயல்பாட்டு), ரியர் அட்மிரல் புனீத் சவுதாரா ஆகியோர் பயிற்சியில் பங்கேற்றனர். இது பல்வேறு நடவடிக்கைகளைக் கொண்டிருந்தது. கப்பல் பொருத்துதல், குழு பயணம், செய்தி அனுப்புதல், பணியாளர்கள் மற்றும்பொருற்களை பரிமாற்றம் செய்தல் மற்றும் ஹெலிகாப்டர் பயிற்சி ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.