கேரள கஞ்சா கொண்ட 03 பேரை கைது செய்ய கடற்படை ஆதரவு

போலீஸ் அதிரடிப் படையினருடன் ஒருங்கிணைந்து கடற்படை கேரளா கஞ்சாவுடன் 03 பேரை வத்தலை பகுதியில் வைத்து 2019 செப்டம்பர் 14 அன்று கைது செய்தது.

அதன்படி, வத்தலை ஒலியமுல் பகுதியில், பொலிஸ் சிறப்புப் படையின் குற்றப் பிரிவு ஒருங்கிணைப்புடன் மேற்கு கடற்படை கட்டளை நடத்திய சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் கண்காணிக்கப்பட்டது. முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மேலும் சோதிக்கும் போது 800 கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சந்தேக நபர்கள் 21, 23 மற்றும் 24 வயதுடைய மட்டக்குலிய பகுதியில் வசிப்பவர்கள் என கண்டரியப்பட்டன.

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார்சைக்கிள் ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பாலியகொடை போலீசாரிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டனர்.