வெளிநாட்டு கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படை மூலம் சிறப்பு பயிற்சி

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் பற்றி நிறுவனத்தின் பங்காளிகளுக்காக நடத்தப்படுகின்ற கப்பல்களுக்கான அணுகல் மற்றும் பறிமுதல் பாடநெறி இன்று (2019 செப்டம்பர் 16) திருகோணமலையில் உள்ள சிறப்பு படகு படை தலைமையகத்தில் தொடங்கியது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில் இந்த திட்டம் சிறப்பு படகு படை பயிற்சி பள்ளியில் நடத்தப்படுகிறது இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சிறப்பு படகு படை பயிற்சி பாடசாலையின் பயிற்சி நிர்வாகி கொமான்டர் ஹேமகுமார ஹெராத் கழந்துகொன்டுள்ளார். மேலும் இந் நிகழ்வில் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட அமலாக்க ஆலோசகர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் கழந்துகொண்டனர்.

உறுப்பு நாடுகளின் கடல்சார் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்காக ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு வார கால பாடநெறி திருகோணமலை சிறப்பு படகு படை தலைமையகத்தில் நடைபெறுகிறது, இதில் இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து தலா 08 கடலோர காவல்படை வீரர்களும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 09 கடலோர காவல்படையினரும் பங்கேற்கின்றனர்.

இந்த பாடநெறி முக்கியமாக போதைப்பொருள் கண்டறிதல், போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் உலகில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும். பயிற்சி செப்டம்பர் 27 ஆம் தேதி முடிவடைய உள்ளது.