இலங்கையில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் உலகளாவிய ஆர்வங்களின் உதவி செயலாளர், கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் உலகளாவிய ஆர்வங்களின் உதவி செயலாளர் திரு. ஜாரோட் ஹோவர்ட் அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை இன்று (செப்டம்பர் 17) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

அங்கு, அவர்கள் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலை நடத்தினர், அதன் பின் கடற்படைத் தளபதியால் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசொன்றும் ஹோவர்ட் அவர்களுக்கு வழங்கினார்.