இலங்கை கடற்படை கப்பல் ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக் லெப்டினென்ட் கொமான்டர் (ஆயுதங்கள்) ருக்மால் எதிரிசிங்க கடமையேற்பு

இலங்கை கடற்படையின் தரையிறக்கம் கப்பலான ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (ஆயுதங்கள்) ருக்மால் எதிரிசிங்க இந்று (செப்டம்பர் 24) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான லெப்டினென்ட் கொமான்டர் (திசைகாட்டி) ருக்மன் வீரசேகரவினால் திருகோணமலை கடற்படை முகாம் வழாவில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக் கொடி கட்டளையின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் உபுல் த சில்வா கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை அதிகாரி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவடைந்தன.