அட்மிரல் (ஓய்வு) வசந்த கரண்னாகொட அட்மிரல் ஒப் த ப்லீட் தரத்திக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளது

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் (ஓய்வு) வசந்த கரண்னாகொடவை ‘அட்மிரல் ஒப் த ப்லீட்’ தரத்திக்கு பதவி உயர்த்தப்படும் விழா இன்று (2019 செப்டம்பர் 19) கொழும்பு துறைமுக வளாகத்தில் பிரமாண்டமாக இடம்பெற்றது. மேலும் இங்கு முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலகவும் மார்ஷல் ஒப் த எயார் போஸ் தரத்திக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அட்மிரல் (ஓய்வு) வசந்த கரண்னாகொட 1971 ஆண்டில் ஆகஸ்ட் 01 ஆம் திகதி இலங்கை கடற்படையில் கடெட் அதிகாரியாக இணைந்து 1974 பிப்ரவரி 01, அன்று துணை லெப்டினெணாக அதிகாரமளித்தார். அதைத் தொடர்ந்து, பல்வேறு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு படிப்புகளை மேற்கொள்வதன் மூலம் பதவி உயர்வு பெற்றுள்ளார். 2005 செப்டம்பர் 01, அன்று அவர் இலங்கை கடற்படையின் 15 வது கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டு வைஸ் அட்மிரலாக பதவி உயர்வு பெற்றார். 2009 மே 18, அன்று மனிதாபிமான நடவடிக்கையின் வெற்றியின் மூலம், அவர் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளதுடன் கடற்படை வரலாற்றில் பணியாற்றிய போது அட்மிரல் பதவி வழங்கப்பட்ட முதல் அதிகாரியானார்.

2009 மே மாதத்தில் முடிவடைந்த மனிதாபிமான நடவடிக்கையின் போது தேசத்திற்கு வழங்கப்பட்ட துணிச்சலான சேவை மற்றும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக வழங்கப்பட்ட சிறந்த சேவையை அங்கீகரிக்கும் வகையில் ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் ஜெனரால் (ஓய்வு) ஷாந்த கோட்டேகொட முன்னாள் கடற்படைத் தளபதிகள் உட்பட பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா, இராணுவ தளபதி, விமானப்படை தளபதி, முப்படையின் பல மூத்த அதிகாரிகள் இந்நிகழ்வின் கலந்து கொண்டனர்.