தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்திற்கு கடற்படையின் பங்களிப்பு

2019 செப்டம்பர் 16 முதல் 21 வரை அறிவிக்கப்பட்டிருந்த ‘தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்திற்காக கடல் வளங்கள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து இலங்கை கடற்படையால் பல்வேறு வகையான கடற்கரை சுத்தம் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, அனைத்து கடற்படை கட்டளைகளிலும் பல கடற்கரை சுத்தம் திட்டங்கள் பாடசாலை குழந்தைகள், அரசு மற்றும் தனியார் துறைகளின் ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் வாரம் முழுவதும் நடத்தப்பட்டன. இந்த துப்புரவு முயற்சிகளின் போது பிளாஸ்டிக் / பாலிதீன் துகள்கள் மற்றும் பிற சீரழிந்த கழிவுகள் கடற்கரைகளில் இருந்து அகற்றப்பட்டன.

அதோடு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து கடற்படை தளங்களிலும் நீல ஹரித கருத்தில் கீழ் சுற்றுச்சூழல் நட்பு நடவடிக்கைகள் பல நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டன.

‘கடலோர மற்றும் கடல் வளங்களை பாதுகாப்பதில் கடற்படை முக்கிய பங்களிப்பு வலங்குகிறது.மேலும் அனைத்து கடற்படை தளங்களையும் சுற்றியுள்ள கடற்கரைகளில் வாரந்தோறும் கடற்கரை சுத்தம் செய்யும் பிரச்சாரங்களை நடத்துகிறது, இலங்கை கடற்கரையை பாதுகாத்து அழகிய கடற்கரையாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.


தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்திற்கு கிழக்கு கடற்படை கட்டளையின் பங்களிப்பு


தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்திற்கு மேற்கு கடற்படை கட்டளையின் பங்களிப்பு


தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்திற்கு வட மேற்கு கடற்படை கட்டளையின் பங்களிப்பு


தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்திற்கு தெற்கு கடற்படை கட்டளையின் பங்களிப்பு


தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்திற்கு தென் கிழக்கு கடற்படை கட்டளையின் பங்களிப்பு


தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்திற்கு வட மத்திய கடற்படை கட்டளையின் பங்களிப்பு