கடற்படை நடவடிக்கைகளின் போது 470 கிலோ பீடி இலைகள் மீட்பு

கடற்படை, இரனைதீவின் கிழக்கே மற்றும் கிளிநொச்சி வலைபாடு, கடல் பகுதியில் 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடல் நடவடிக்கைகளின் போது, பீடி இலை பொதியொன்று மீட்டது.

வட மத்திய கடற்படை கட்டளை இரனைதீவின் கிழக்கிலும், கிலினோச்சியில் வலைபாடு கடலில் மேற்கொள்ளப்பட்ட தேடல் நடவடிக்கைகளின் போது, 07 சந்தேகத்திற்கிடமான பார்சல்கள் இருப்பதைக் கண்டது. கடற்படை மேற்கொன்டுள்ள மேலதிக விசாரணையின் போது, 470 கிலோ பீடி இலைகளை அந்த பொதிகளுக்குள் கண்டுபிடிக்க முடிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண சுங்கத்திடம் ஒப்படைக்கப்படும்.

அதன்படி, இந்த மாதத்தில் மட்டும் வட மத்திய கடற்படை கட்டளையில் நடத்தப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் போது 2,000 கிலோவுக்கு மேற்பட்ட பீடி இலைகளை மீட்டுள்ளது. கடற்படை செயல்பாடுகள் காரணமாக போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் மோசடிகாரர்களுக்கும் தங்களுடைய சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியவில்லை மேலும், இவ்வாரான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்க கடற்படை விழிப்புடன் உள்ளது,