‘The Maritime Standard Awards 2019’ இறுதி வெற்றியாளர்கள் மத்தியில் இலங்கை கடற்படை இணைகிறது

‘The Maritime Standard Awards 2019’ வருடாந்த விருது வழங்கும் விழாவில் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு பிரிவில் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இலங்கை கடற்படை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Flagship Events LLC மூலம் ஏற்பாடு செய்யப்படுகின்ற ‘The Maritime Standard Awards 2019’ விருது வழங்கும் விழா துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர், எமிரேட்ஸ் ஏவியேஷன் ஆணையத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஷேக் அகமது பின் சயீத் அல் மக்டோம் அவர்களின் தலைமையில் துபாயில் அக்டோபர் 21 ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நிகழ்வில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல நிறுவனங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மிகவும் திறமையான பணியாளர்களைக் கொண்ட இலங்கை கடற்படை பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு வகையான சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துகிறது.

அதன்படி, கடற்படை மறுசுழற்சி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுதல், தலசீமியா ஊசி இயந்திரங்கள் தயாரித்து விநியோகித்தல், தொலைதூர பகுதிகளில் உள்ளவர்களுக்கு மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்தல், வெள்ள பேரழிவு நிவாரணத்தில் பங்கேற்றல், கடலில் மீன்பிடி சமூகத்திற்கு உதவியளித்தல், மற்றும் நீல பசுமை சுற்றுச்சூழல் கருத்து போன்ற திட்டங்களை இலங்கை கடற்படை முறையாக செயல்படுத்து வருகின்றது.