'நீர்க்காகம் போர் பயிற்சி பார்வையிட கடற்படைத் தளபதி பங்கேற்பு

இலங்கை இராணுவத்தினரால் 10 வது முரையாக ஏற்பாடு செய்யப்பட்ட முப்படைகளின் கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி’ இறுதிக்கட்ட நடவடிக்கைகள் திருகோணமலை குச்சவெளிப் பிரதேசத்தில் வெற்றிகரமாக நேற்று (செப்டெம்பர், 23) நிறைவுற்றது. இப்பயிற்சியின் இறுதிக்கட்ட நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன பிரதம அதிதியாக கலந்து சிரப்பித்துள்ளார்.

மேலும் இப் பயிற்சி பார்வையிட இராணுவத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, விமானப்படைத் தளபதி, ஏர் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் உட்பட முத்தரப்புப் படைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டுப் பயிற்ச்சிக்காக கடற்படையின் 400 வீர்ர்கள், இராணுவத்தின் 2400 வீர்ர்கள் மற்றும் 200 விமாணப் படை வீர்ர்கள் கழந்து கொண்டனர். மேலும் மலேசியா, மாலத்தீவு, நேபாளம், ரஷ்யா, அமெரிக்கா, பங்களாதேஷ், சீனா, பிரான்ஸ், இந்தியா, ஈரான், பாகிஸ்தான், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி பல இராணுவ வீரர்கள் கழந்துகொன்டனர்.

குறித்த கள முனை போர் பயிற்சி மின்னேரிய இராணுவ காலாட்படை பயிற்சி மையத்தில் கடந்த செப்டெம்பர் 04 ஆம் திகதி தொடங்கியது. நட்பு படைகளின் பரஸ்பர நட்பு மற்றும் செயல்பாட்டு திறனை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறதுடன் இலங்கை கடற்படையின் இலங்கை கடற்படை கப்பல் சக்தி, ரனரிசி மற்றும் ரனஜய ஆகிய கப்பல்கலுடன் துரித தாக்குதல் படகுகள், கடலோர ரோந்து படகுகள் மற்றும் செட்ரிக் படகுகளும் கழந்துகொன்டுள்ளது.