மோசமான வானிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை ஆதரவு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் வெள்ள வெள்ள ஆபத்து ஏற்பட்டுள்ளதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவின் அறிவுறுத்தல்களின் படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படைவீரர்கள் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்பிரகாரம், காலி மாவட்டத்தில் தவலம, பத்தேகம, உடுகம, போத்தல, இமதுவ, நாகொட ஆகிய பகுதிகளிளும், களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கல, வலல்லாவிட ஆகிய பகுதிகளிளும் மாத்தரை மாவட்டத்தில் அகுரெஸ்ஸ உட்பட பல பகுதிகளிலும் இப்போது துரிதமான இயங்கம் மிட்பு மற்றும் நிவாரனப் படை பிரிவு(4RS) மற்றும் கடற்படை சுழியோடிகள் பிரிவுகளைச் சேர்ந்த கடற்படைவீரர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை கடற்படை இதுவரை 417 பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றுள்ள அதே நேரத்தில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த 18 பேரையும் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடற்படை கட்டளைகளுக்கும் அவசர காலங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ள பல அவசரகால குழுவினர் ஏற்கனவே தயாராகவுள்ளனர்.