புல்மோடை, ஜின்னபுரம் பகுதியில் வைத்து ஆர்பிஜி குண்டொன்று கடற்படையால் கண்டுபிடிப்பு

கடற்படையினரினால் புல்மோடை, ஜின்னபுரம் பகுதியில் 2019 செப்டம்பர் 23 ஆம் திகதி மேற்கொன்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு ஆர்பிஜி குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் படி, கிழக்கு கடற்படை கட்டளை மூலம் புல்மோடை, ஜின்னபுரம் பகுதியில் நடந்திய தேடல் நடவடிக்கையின் போது, இந்த ஆர்பிஜி குண்டை கண்டுபிடித்தது, மனிதாபிமான நடவடிக்கையின் போது இந்த குண்டு கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றதுடன் இந்த சம்பவம் குறித்து புல்மோடை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.