கடலில் மிதந்துகொன்டுருந்த 65 கிலோ கிராம் புகையிலை கடற்படையால் கண்டுபிடிப்பு

கடற்படையினர்களினால் 2019 செப்டம்பர் 23 ஆம் திகதி கச்சதீவு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கடலில் மிதந்துகொன்டுருந்த 65 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது.

வடக்கு கடற்படை கட்டளை மூலம் கச்சதீவுக்கு வடக்கு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கடலில் மிதந்துகொன்டுருந்த சந்தேகமான பொதியொன்றை கண்கானித்துள்ளது.மேலும் குறித்த பொதியை சோதிக்கும் போது அதுக்குழ் உள்ள 07 சிறிய பொதிகளில் 65 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது.

கடற்படை தொடர்ந்து மேற்கொண்ட ரோந்துகளின் காரணமாக கடத்தல்காரர்கள் குறித்த புகையிலை பொதிகள் கடலில் கைவிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறதுடன் குறித்த புகையிலை பொதி மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம், சுங்க அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆண்டில் மட்டும் நடத்தப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் போது 34000 கிலோவுக்கு மேற்பட்ட பீடி இலைகளை மீட்டுள்ளது. மேலும், இவ்வாரான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்க கடற்படை விழிப்புடன் உள்ளது