இந்திகஸ்கெடிய நீர் விநியோக நிலையத்தில் கடற்படை மேற்கொன்டுள்ள நிர்முழ்கி நடவடிக்கை

நிலவும் மோசமான வானிலை காரணமாக பத்தேகம இந்திகஸ்கெடிய நீர் விநியோக நிலையத்தில் சிக்கியுள்ள கழிவுகளை 2019 செப்டம்பர் 24 ஆம் திகதி கடற்படையால் அகற்றப்பட்டன.

கின் கங்கையின் துணை நதியான மெகிமுல்ல நதி குறுக்காக நிர்மாணிக்கப்பட்ட இந்திகஸ்கெடிய நீர் விநியோக நிலையத்தில் கழிவுகள் சிக்கி நீர் விநியோக நிலைம் செயலிழந்துவிட்டதாக கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் உடனடி நடவடிக்கைக்காக தெற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட நீர்முழ்கி குழு அங்கு சென்றுள்ளது.

நீர் விநியோக நிலைம் செயலற்ற காரணமாக, ஆற்றின் மேல் பகுதியில் உள்ள நீர் மட்டம் வெள்ள அபாயத்தில் இருந்தது. கடற்படை நீர்முழ்கி வீர்ர்களுடைய திறமையான நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி நீர் விநியோக நிலையத்தில் சிக்கிருந்த கழிவுகள் அகற்றப்பட்டு மீண்டும் நீர் விநியோக நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

மேலும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவவும், சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் கடற்படை நிவாரண குழுக்கள் செயல்பட்டுவருகின்றன.