ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்ய கடறட்படை ஆதரவு

மன்னார், சிரிநவட்டகுழம் பகுதியில் 2019 செப்டம்பர் 24 ஆம் திகதி கடற்படை மற்றும் மன்னார் போலீஸ் ஊழல் தடுப்பு பிரிவு இனைந்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் ஒரவரை கைது செய்தனர்.

அதன்படி வடமத்திய கடற்படை கட்டளை மற்றும் மன்னார் போலீஸ் ஊழல் தடுப்பு பிரிவு இனைந்து மன்னார், சிரிநவட்டகுழம் பகுதியில் நடத்திய தேடலின் போது சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்று காணப்பட்டது குறித்த வண்டியை சோதித்த போது அங்கிருந்து 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் சந்தேக நபர் அப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரி என அடையாளம் காணப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் 30 வயதுடைய மன்னார், எருக்குலம்பிட்டி பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் முச்சக்கர வண்டி, மற்றும் ஐஸ் போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.