போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸ் அதிரடிப் படையினர் ஒருங்கிணைந்து 2019 செப்டம்பர் 24 ஆம் திகதி திஸ்ஸமஹாராமய அலுத்கொட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது.உள்ளூர் கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

அதன்படி, திஸ்ஸமஹாராமய அலுத்கொட பகுதியில் தெற்கு கடற்படை கட்டளை மற்றும் கதிர்காமம் பொலிஸ் அதிரடிப் படையினர் நடத்திய கூட்டு சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்று காணப்பட்டதுடன் குறித்த வண்டியை சோதித்த போது வண்டியில் இருந்த நபரிடம் உள்ளூர் கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் மேற்கொன்டுள்ள விசாரனையின் போது குறித்த கஞ்சா பொதி விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இவர் இப் பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர் என்பதும் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் இப் பகுதியில் வசிக்கின்ற 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர், முச்சக்கர வண்டி மற்றும் கஞ்சா ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக திஸ்ஸமஹாராமய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.