கடற்படை நடவடிக்கைகள் மூலம் 840 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டன

கடற்படை 2019 செப்டம்பர் 25 ஆம் திகதி தலைமன்னர் கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 840 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடித்துள்ளது.

வட மத்திய கடற்படை கட்டளை மூலம் தலைமன்னர் கடற்கரை பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கரை ஒதுங்கிய சந்தேகத்திற்கிடமான 18 பொதிகள் காணப்பட்டுள்ளதுடன் அதை மேலும் சோதிக்கும் போது அதுக்குழ் இருந்து 840 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்ட பீடி இலை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, இந்த மாதத்தில் மட்டும் வட மத்திய கடற்படை கட்டளையில் நடத்தப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் போது 3500 கிலோவுக்கு மேற்பட்ட பீடி இலைகளை மீட்டுள்ளதுடன் மேலும், இவ்வாரான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்க கடற்படை விழிப்புடன் உள்ளது