கடற்படையின் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன

தீவில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக, பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. இதேவேளை, தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட இப் பகுதிகளில் அவசர நிலைமைகளுக்கு உதவும் வகையில் கடற்படை நிவாரணக் குழுக்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர்.

அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களை மீட்க 24 நிவாரண குழுக்கள் மற்றும் 13 டிங்கி படகுகள் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கலுதர மாவட்டத்தில் வலல்லாவிட மற்றும் புலத்சிங்கல பகுதிகளில் காலி மாவட்டத்தில் நாகோட, தவலம, இமதூவ, உடுகம மற்றும் போத்தல பகுதிகளில் மாதர மாவட்டத்தில் கம்புருபிட்டி, திஹகொட, மாலிம்பட மற்றும் அகுரெஸ்ஸ பகுதிகளில் கொழும்பு மாவட்டத்தில் கோட்டிகாவத்த ஆகிய பகுதிகளில் இவ்வாரு நிவாரண குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், காலி மாவட்டத்தில் தெல்கஹதொட பகுதியில் பொல்அதுமோதர ஆற்று குறுக்காக ஒரு மரம் விழுந்து அழுக்கு குவிந்ததால், வடிகால் தடைபட்டு, அந்த பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இருந்தது. எனவே, வடிகால் விரைவுபடுத்த கடற்படையின் நிவாரண குழுக்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தன.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை நிவாரண குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் கடற்படை இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து கவனித்து வருகிறது.