கடற்படை 1243.3 கிலோ கிராம் பீடி இலைகளை மீட்டுள்ளது

மன்னார் சவுத்பார் மற்றும் ஒலுதுடுவாய் பகுதிகளில் 2019 செப்டம்பர் 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ரோந்துகளின் போது 34 பார்சல்களில் மூடப்பட்டிருந்த 1243.3 கிலோ பீடி இலைகள் கடற்படையால் மீட்கப்பட்டன.

அதன்படி, மன்னார் சவுத்பார் கடற்கரை பகுதியில் வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய கால் ரோந்துப்பணியின் போது கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொலெரோ வண்டியொன்று காணப்பட்டது, மேலும் மேற்கொன்டுள்ள தேடுதல் நடவடிக்கைகள் மூலம் 12 பார்சல்கள் மீட்கப்பட்டன. இந்த பார்சல்களில் 368.4 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்த்தாக குறிப்பிடத்தக்கது.

மேலும், அதே நாளில், மன்னார் ஒலுத்துவாய் கடற்கரைக்கு கரை ஒதுங்கிய 22 பொட்டலங்களில் அடங்கிய 874.9 கிலோ கிராம் பீடி இலைகள் வட மத்திய கடற்படை கட்டளையால் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட பீடி இலைகள் மற்றும் பொலெரோ வண்டி ஆகியவை யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன. அதன்படி, இந்த ஆண்டுக்குள் இலங்கை கடற்படை நடத்திய சோதனைகளின் போது 35 டன்களுக்கு அதிகமான பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.