இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் புனரமைக்கப்பட்ட ‘நேனசல’ வடக்கு கடற்படை கட்டளை தளபதியால் திறந்து வைப்பு

இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் புனரமைக்கப்பட்ட ‘நேனசல’ இன்று (2019 செப்டம்பர் 26) வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுக்காக வடக்கு கடற்படைக் கட்டளையின் துறைத் தலைவர்கள் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர்.

இது இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் நீண்டகால தேவையாக இருந்ததுடன் புதுப்பிக்கப்பட்ட வசதிகள் கடற்படை பணியாளர்களுக்கு அவர்களின் தகவல் தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.