வக்வெல்ல பாலத்தில் கீழ் சேகரிக்கப்பட்ட பெரிய மர துண்டுகள் கடற்படையினரினால் அகற்றப்பட்டன

அண்மைய வெள்ளப்பெருக்கின் மூலம் மர துண்டுகள், குப்பை கூலங்கள் நிறைந்து நீரோட்டம் தடைப்பட்ட காலி வக்வெல்ல பாலத்தை இலங்கை கடற்படையினர் இன்று (செப்டம்பர், 26) சுத்தம் செய்துள்ளனர்.

அண்மைய வெள்ளப்பெருக்கின் மூலம் காலி வக்வெல்ல பகுதியில் வக்வெல்ல பாலத்தில் கீழ் பெரிய மர துண்டுகள், குப்பை கூலங்கள் நிறைந்து நீரோட்டத்துக்கு தடையாக உள்ளது. இக் காரணத்தினால் இப் பகுதி நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.

அதன் படி தென் கடற்படை கட்டளையின் சுழியோடி பிரிவு மற்றும் மரையின் பிரிவு ஆகியவற்றின் கடற்படை வீரர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக அப்பகுதிகளின் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படாதவண்ணம் குப்பை கூலங்களை சுத்தம் செய்யப்பட்டது.