கிளிப்போசைட் 186 பாக்கெட்டுகளுடன் நபரொருவர் கைது

பொலிஸ் அதிரடிப்படை (எஸ்.டி.எஃப்) உடன் கடற்படை இணைந்து மெதவச்சிய நகரில் செப்டம்பர் 26 அன்ற நடத்திய சோதனை நடவடிக்கையின் போது கிளிப்போசைட்டுடன் நபரொருவரை கைது செய்தது,

செட்டிகுளம் பொலிஸ் அதிரடிப்படையின் உதவியுடன் வட மத்திய கடற்படை கட்டளை மெதவச்சிய நகர பகுதியில் சோதனை நடத்தியது மற்றும் தடைசெய்யப்பட்ட கிளிப்போசைட் 186 பாக்கெட்டுகள் (18.6 கிலோ) கண்டுபிடிக்கப்பட்டது. கிளிப்போசைட் பாக்கெட்டுகள் ஒரு சில்லறை கடையில் விற்பனைக்கு வந்துள்ளன, அதன்படி கடை உரிமையாளரும் வைத்திருந்துள்ளார்.

சந்தேக நபர் மற்றும் சட்டவிரோத உரங்கள் ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக அனுராதபுர வேளாண்மைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.