கடற்படை வடக்கு கட்டளையில் கடற்கரை சுத்தம் செய்யும் மற்றுமொரு வேலைத்திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று 2019 செப்டம்பர் 27 அன்று வடக்கு கடற்படை கட்டளையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை மர்சான்குடல் மற்றும் சம்பிலித்துரை இடையேயான கடற்கரைப் பகுதியிலும், செட்டியர்குளம் கடற்கரையிலும் இந்த தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்ட்டது. இந்த முயற்சிகளில் ஈடுபட்ட கடற்படைப் வீரர்களினால் பல காரணங்களால் பரவலாக மாசுபட்டிருந்த கடற்கரை பரதேசங்கள் சுத்தம் செய்யப்பட்டது.

மேலும், தீவைச் சுற்றி ஒரு சுத்தமான மற்றும் அழகான கடற்கரையை கொண்டுவருவதில் கடற்படை மிகவும் முன்னோடியாக உள்ளதுடன் ஒவ்வொரு வாரமும் அனைத்து கடற்படை கட்டளைகளிலும் கடற்கரை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை நடத்தப்பகிறது.