வடக்கு கடலில் கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 743.8 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டன

வடக்கு கடலில் கடற்படையினர் 2019 செப்டம்பர் 27 ஆம் திகதி நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு கடத்தல்காரர்கள் 27 பொதி பீடி இலைகளுடன் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், அடுத்து கடற்படையின் தேடுதல் நடவடிக்கை அதே கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது, இதன் விலைவாக கோவிலம் கலங்கரை விளக்கத்திற்கு மேற்கே உள்ள கடல்களில் மேலும் 12 பீடி இலை பொதிகள் கடற்படையினால் கண்டுபிடிக்க முடிந்தது.

பீடி இலை பொதிகள் நீரில் மிதந்த நிலையில் கைப்பற்றப்பட்டதுடன் பொதிகளில் 743.8 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்தன. கடற்படை நடத்திய தொடர்ச்சியான ரோந்து நடவடடிக்கைகளுக்கு பயந்து கடத்தல்காரர்கள் பொதிகளை விட்டுச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதன்படி, செப்டம்பர் 27 ஆம் திகதி வடக்கு கடல் பகுதிகளில் மொத்தம் 2,060.4 கிலோ கிராம் பீடி இலைகளை கடற்படை கைப்பற்றியுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் யாழ்ப்பாணம் சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இலங்கை கடலில் கடற்படை தொடர்ச்சியான ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருவதால், மோசடி செய்பவர்கள் தீவில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக காணப்படுகின்றது.