கடற்படையின் இன்டர்-கமாண்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

இலங்கை கடற்படை இன்டர்-கமாண்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி கிழக்கு கடற்படை கட்டளை டென்னிஸ் கோர்ட்டில் 27 செப்டம்பர் 2019 அன்று நடைபெற்றது. கிழக்கு கடற்படை பகுதி தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

‍‍‍அனைத்து கடற்படை கட்டளைகளும் போட்டிகளில் பங்கேற்று மேற்கு கடற்படை கட்டளை சாம்பியன்ஷிப்பை வென்றது. இதற்கிடையில், கிழக்கு கடற்படை கட்டளை இரண்டாம் இடத்தைப் பிடித்தது.