750 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் போலீஸ் சிறப்பு படையணி இனைந்து 2019 செப்டம்பர் 29 ஆம் திகதி கந்தான பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது 750 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டன.

அதன் படி மேற்கு கடற்படை கட்டளை மற்றும் போலீஸ் சிறப்பு படையணி இணைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை கண்கானிக்கப்பட்டதுடன் மேலும், முச்சக்கர வண்டி சோதிக்கும் போது குறித்த கேரளா கஞ்சா பொதி கண்டு பிடிக்கப்பட்டன.

கைது செய்யப்ட்ட இருவர், முச்சக்கர வண்டி மற்றும் கேரளா கஞ்சா பொதி மேலதிக விசாரணைக்காக கந்தான போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.