தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதினைந்து 05 நபர்கள் 2019 அக்டோபர் 01, அன்று திருகோணமலை சினம்வேலி பகுதியில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்த சந்தேக நபர்கள் திருகோணமலை சினம்வேலி பகுதியில் நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கிழக்கு கடற்படைத் கட்டளை மூலம் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் 33 முதல் 60 வயது வரையிலான கின்னியா பகிதிகளில் வசிப்பவர்கள் என கண்டரியப்பட்டன. அங்கு அவர்களிடமிருந்து ஒரு டிங்கி படகு, ஒரு தடைசெய்யப்பட்ட வலை மற்றும் சில மீன்பிடிபொருட்கள் கடற்படையினரினால் கைப்பற்றியது. டிங்கி படகு, வலை மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் திருகோணமலை உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இதுபோன்ற தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதால் கடல் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தின் மீன் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.