“ஷில்பசேனா” கண்காட்சிக்கு கடற்படையின் பங்களிப்பு

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஷில்பசேனா கண்காட்சி - இலங்கை தொழில்நுட்ப புரட்சி -2019” திட்டம் 2019 செப்டம்பர் 25 முதல் 29 வரை பொலன்னருவ கதுருவேல மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை கடற்படையும் இக் கண்காட்சியில் கடற்படை கண்காட்சி சாவடியுடன் பங்கேற்றது.

நாடு முழுவதிலுமிருந்து பாடசாலை குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் இந்த கண்காட்சி சாவடியை பார்வையிட வந்து கடற்படை மற்றும் கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிந்து கொண்டனர். இது பாடசாலை குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு கடற்படையின் தலசீமியா திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நீர் சுத்திகரிப்பு நிலையங்களைப் பற்றி அறிய வாய்ப்பளிக்கிறது.