3.9 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையால் கண்டுபிடிப்பு

கடற்படை மற்றும் மனல்காடு போலீஸ் அதிரடிப்படை ஒருங்கிணைந்து 2019 ஆக்டோபர் 01 அன்று நகர் கோவில் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, 3.9 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை மற்றும் போலீஸ் அதிரடிப்படை ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஒரு சந்தேகத்திற்கிடமான பொதியொன்று கண்காணிக்கப்பட்டது மேலும் அதை சோதிக்கும் போது இந்த கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டன.

கடற்படை மற்றும் போலீஸ் அதிரடிப்படை ஒருங்கிணைந்து மேற்கொள்கின்ற நடவடிக்கைகளினால் இந்த கேரள கஞ்சா கைவிட்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. கண்டுபிடிக்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.