658 சங்குகளுடன் ஒருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் சின்னகுடிரிப்பு போலீசார் இனைந்து 2019 அக்டோபர் 01 ஆம் திகதி கற்பிட்டி சின்னகுடிரிப்பு பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 658 சங்குகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளை மற்றும் சின்னகுடிரிப்பு போலீசார் இனைந்து கற்பிட்டி சின்னகுடிரிப்பு பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சங்குகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார் இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர் 42 வயதான இப் பகுதியிலே வசிக்கின்ற நபராக அடையாலம் காணப்பட்டார். குறித்த சந்தேக நபர் மற்றும் சங்குகள் ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக புத்தலம் மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், மீன்வள மற்றும் நீர்வளச் சட்டத்தினால் 70 மி.மீ க்கும் குறைவான விட்டம் கொண்ட சங்குகளை வைத்திருத்தல், வாங்குவது, விற்பனை செய்தல், காட்சிப்படுத்துதல், போக்குவரத்து அல்லது ஏற்றுமதி செய்வதை தடை செய்யப்பட்டுள்ளது.