செல்லுப்படியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சங்குகள் கொண்டு சென்ற ஒருவர் கடற்படையால் கைது

தலைமன்னார், ஊருமலை பகுதியில் இன்று (2019 ஆக்டோபர் 01) கடற்படை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது செல்லுப்படியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சங்குகள் கொண்டு சென்ற ஒருவர் மற்றும் 226 சங்குகள் கைதுசெய்யப்பட்டன.

அதன்படி, வட மத்திய கடற்படைகட்டளை மூலம் தலைமன்னார், ஊருமலை பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது ஒரு சந்தேகத்திற்கிடமான கேப் வண்டியொன்று கண்காணிக்கப்பட்டதுடன் அதை மேலும் சோதிக்கும் போது குறித்த சங்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த சங்குகள் ஊருமலையில் இருந்து பேஸாலை வரை கொண்டு செல்லும் போது இவ்வாரு கடற்படையால் கைது செய்யப்பட்டதுடன் 51 வயதான மன்னார், பேஸாலை பகுதியில் வசிப்பவர் என கண்டரியப்பட்டன. சந்தேகநபர், சங்குகள் மற்றும் கேப் வண்டி மேற்படி விசாரணைக்காக மன்னார் மீன்பிடித்துறை அலுவளகரிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், மீன்வள மற்றும் நீர்வளச் சட்டம் மூலம் 70 மி.மீ க்கும் குறைவான விட்டம் கொண்ட சங்குகள் வைத்திருத்தல், வாங்குவது, விற்பனை செய்தல், காட்சிப்படுத்துதல், கொண்டு செல்வது அல்லது ஏற்றுமதி செய்வதை தடை செய்யப்பட்டுள்ளது