நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படையினரினால் கண்டுடபிடிக்கப்பட்டது

கடற்படையினரினால் இன்று (அக்டோபர் 02) காலை மேற்கொள்ளப்பட்ட நீர் முழ்கி நடவடிக்கையின் போது பொகவன்தலாவ, கெஹல்கமு ஓயவில் விழுந்து நீரில் மூழ்கிய நபரின் உடலை கண்டுடபிடித்துள்ளனர்.

அதன் படி, போகவந்தலாவ கெஹல்கமு ஓயவில் நீரில் மூழ்கிய 53 வயது ஆணின் சடலம் மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை நீர்முழ்கி குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் நீரில் மூழ்கிய இடத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் நதியில் அடிப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. மேலதிக விசாரணைகளுக்காக சடலம் போகவந்தலாவ போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.