20 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் ஜா எல போலீஸார் ஒருங்கிணைந்து 2019 அக்டோபர் 02 அன்று ஜா எல பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, 20 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த இருவரை கைது செய்தது.

அதன்படி,மேற்கு கடற்படை கட்டளை மற்றும் ஜா எல போலீஸார் ஒருங்கிணைந்து ஜா எல, கொஹுமோல சந்தியில் சாலைத் தடையில் சந்தேகமான ஒரு முச்சக்கர வண்டி சோதிக்கும் போது அங்கு இருந்த ஒருவரிடமிருந்து இந்த கஞ்சா பொதி, நியுரோன் வகையில் மருந்து மற்றும் இலங்கையில் செல்லுபடியாகும் 49,370.00 ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த இருவர் மற்றும் முச்சக்கர வண்டி, நியுரோன் வகையில் மருந்து மற்றும் பணம் மேலதிக விசாரணைக்காக ஜா எல போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.