570 கிராம் மதனமோதக போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் கல்முனை போலீசார் ஒருங்கிணைந்து 2019 அக்டோபர் 2 ஆம் திகதி கல்முனை நிந்தவூர் பகுதியில் மேற்கொண்ட தேடலின் போது 570 கிராம் மதனமோதக போதைப்பொருள் கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, தென்கிழக்கு கடற்படை கட்டளை கல்முனை பொலிஸுடன் ஒருங்கிணைந்து கல்முனையில் நிந்தாவூர் பகுதியில் மேற்கொண்ட தேடலின் போது ஒரு சந்தேக நபர் காணப்பட்டார், மேலும் அவரை சோதிக்கும் போது 39 பொட்டலங்களில் பொதி செய்யப்பட்ட இந்த மதனமோதக போதைப்பொருள் அவரது வசம் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணையில், இந்த நபர் அந்த பகுதியில் ஒரு போதைப்பொருள் வியாபாரி என அடையாளம் காணப்பட்டார், மேலும் இந்த மதனமோதக விற்பனைக்கு கொண்டு செல்லும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டனர்.

மதனமோதக போதைப்பொருள் சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக கல்முனை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.