6.6 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்துடன் இணைக்கப்பட்ட காவல்துறையினர் 2019 அக்டோபர் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் மருதன்கேனி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 6.6 கிலோகிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை மற்றும் யாழ்ப்பாணம் போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்துடன் இணைந்த அதிகாரிகள் யாழ்ப்பாணம் மருதன்கேனி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது .மோட்டார் சைக்கிள் சென்ற ஒருவர் சோதிக்கும் போது அவரிடமிருந்து குறித்த கஞ்சா பொதி கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த சந்தேகநபர், மோட்டார் சைக்கிள் மற்றும் கேரள கஞ்சா கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

யாழ்ப்பாணம் தலையாடி பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய இந்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பல்லாய் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.