கேரள கஞ்சா மற்றும் உள்ளூர் கஞ்சா வைத்திருந்த ஒருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் புத்தலம் போலீசார் ஒருங்கிணைந்து இன்று (அக்டோபர் 03) புத்தலம் பாலாவி பகுதியில் மேற்கொண்ட தேடலின் போது 1.087 கிராம் கேரள கஞ்சா மற்றும் 7.900 கிராம் உள்ளூர் கஞ்சா கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளை மற்றும் புத்தலம் போலீஸார் ஒருங்கிணைந்து பாலாவி, கரபே சந்தியில் சாலைத் தடையில் சந்தேகமான ஒரு மோட்டார் வண்டி சோதிக்கும் போது அங்கு இருந்து இந்த கஞ்சா பொதி கண்டுபிடிக்கப்பட்டன. மீட்கப்பட்ட கேரள கஞ்சா மற்றும் உள்ளூர் கஞ்சா, மோட்டார் வண்டி மற்றும் சந்தேகநபர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது. அராச்சிகட்டுவ பகுதியில் வசிக்கும் 58 வயதான குறித்த நபர், கேரள கஞ்சா மற்றும் உள்ளூர் கஞ்சா மீது சட்ட நடவடிக்கை எடுக்க புத்தலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.