குருநகர் பகுதியில் ஏராளமான வெடிபொருட்கள் கடற்படையினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2019 அக்டோபர் 03 ஆம் திகதி யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது அதிக சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை மூலம் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான பொதி யொன்று கண்டுபிடிக்கப்பட்ட்ள்ளதுடன், மேலும் குறித்த பொதியை சோதிக்கும் போது 1 கிலோ 30 கிராம் உயர் வெடிபொருட்களின் 04 தொகுப்புகள் அங்கு காணப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கடற்படையினரினால் மேற்கொள்ளப்படுகின்றது.