காலி தெவட பகுதியில் மூன்று மாடி வீட்டில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தை கட்டுப்படுத்த கடற்படை உதவி

கடற்படையினர் மற்றும் காலி தீயணைப்பு பிரிவு ஒன்றாக இணைந்து 2019 ஆக்டோபர் 04 ஆம் திகதி காலி தெவட பகுதியில் கஜுவத்த விஹாரை அருகே மூன்று மாடி வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த உதவியுள்ளனர்.

அதன்படி, தெக்கு கடற்படை கட்டளை மற்றும் காலி தீயணைப்பு பிரிவு ஒன்றாக இணைந்து காலி தெவட பகுதியில் விட்டில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த உதவியுள்ளனர். காலி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மூலம் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பாக கடற்படை தலைமையகத்துக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து கடற்படையின் தீயணைப்பு குழுவினர் தலத்திற்கு விரைந்து செயற்பட்டது. அங்கு காலி தீயணைப்பு பிரிவுடன் இனைந்து கடற்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் காரணமாக தீ அனர்த்தத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வர முடிந்தது.