விபத்தான வெளிநாட்டு பாய்மரக் கப்பலை மீட்க கடற்படை ஆதரவு

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அப்பால் உள்ள கடலில் விபத்தான வெளிநாட்டு பாய்மரக் கப்பலொன்றை கடற்படையினரினால் பாதுகாப்பாக ஆக்டோபர் 05 ஆம் திகதி கரைக்கு கொண்டு வரப்பட்டன.

அதன் பிரகாரமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் வைத்து இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிழை காரனத்தினால் விபத்தான (SY-LESSIAMOIS) என பிரஞ்சுக்கு சொந்தமான கப்பல் பற்றி தகவல்கள் கடற்படைக்கு கிடைத்த பின் குறித்த கப்பல் கடற்படையினருனால் கரைக்கு கொண்டு வரப்பட்டன.குறித்த கப்பல் பற்றி இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவல்களின்படி, கப்பலை மீண்டும் கரைக்கு கொண்டு வர கடற்படை துரித தாக்குதல் படகு ஒன்றை அனுப்பியுள்ளதுடன் இப் படகு மூலம் பாய்மரக் கப்பலை பாதுகாப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த கப்பல் இலங்கை கடல்சார் பணியகம் வழியாக இந்தோனேசியாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, விபத்தானது. இக் கப்பலின் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தனர்.

மேலும், இலங்கையைச் சுற்றியுள்ள கடலைப் பயன்படுத்தும் கடல் மற்றும் மீன்பிடி சமூகத்திற்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் கடற்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இலங்கை கடற்படை தலைமையகத்தில் உள்ள கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (Maritime Rescue Coordinating Centre) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கடற்படை மற்றும் மீன்பிடி சமூகத்தை பேரழிவுகளிலிருந்து மீட்பதற்காக கடற்படை தொடர்ந்து தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.