காலி கலுவெல்ல புனித மேரி தேவாலயத்தின் வருடாந்திர திருவிழாவுக்கு கடற்படை பங்களிப்பு

காலி கலுவெல்ல புனித மேரி தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா 2019 அக்டோபர் 5, அன்று ஏராளமான கிறிஸ்தவ பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

அதன் படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களின் மற்றும் தெற்கு கடற்படைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், தெற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் அவர்களின் முழு ஆதரவும் உதவியும் வழங்கினார்கள்

இந்த வருடாந்திர திருவிழாவை வெற்றிபெறச் செய்த சிறப்பான பங்களிப்புக்காக பொறுப்பான பாதிரியார்கள் மற்றும் பக்தர்கள் இலங்கை கடற்படைக்கு நன்றி தெரிவித்தனர். கூடுதலாக, இத்தகைய மதத் திட்டங்களுக்கு கடற்படை எப்போதும் முக்கிய பங்களிப்பாக இருந்து வருகிறது.