45 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது

கடற்படையினரால் 2019 ஆக்டோபர் 05 ஆம் திகதி மனக்காடு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 45 கிலோ கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை மூலம் மனக்காடு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகமான படகொன்று கண்கானித்துள்ளதுடன் மேலும் இப் படகை சோதிக்கும் போது குறித்த கஞ்சா பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாரு கைது செய்யப்பட்ட கஞ்சா பொதிகள், சந்தேகநபர்கள், டிங்கி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரினால் யாழ்ப்பாணம் போலீஸ் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.