57 வது தேசிய ஜூடோ போட்டித் தொடரில் பெண்கள் சாம்பியன்ஷிப்பில் கடற்படை வெற்றி பெற்றது

அக்டோபர் 03 மற்றும் 04 திகதிகளில் நாவலப்பிட்டி ஜெயதிலக உட்புற மைதானத்தில் நடைபெற்ற 57 வது தேசிய ஜூடோ போட்டியில் கடற்படை பெண்கள் ஜூடோ அணி ஒட்டுமொத்த சாம்பியனானது.

கடற்படையின் பெண்கள் ஜூடோ அணி 10 தங்கப் பதக்கங்கள், 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றது. ஆண்கள் ஜூடோ அணி ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களையும் வென்று மூன்றாவது இடம் பெற்றுள்ளது.

கடற்படை ஜூடோ பிரிவின் தலபதி, கேப்டன் அசங்க ரதுகமகே, கடற்படை விளையாட்டு வீரர்கள் ஆகியோரும் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.